குமரி: தொடர் விடுமுறையால் திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Update: 2021-12-28 15:15 GMT

குமரியில் உள்ள திற்பரப்பு அருவி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியில் அமைந்துள்ளது திற்பரப்பு நீர்வீழ்ச்சி.

வருடத்தில் அனைத்து நாட்களிலும் குறைவில்லாமல் தண்ணீர் விழும் இந்த நீர்வீழ்ச்சியானது குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் அரையாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும் சபரிமலை சென்று திரும்பும் அய்யப்ப பக்தர்களும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குவிந்து வருகின்றனர்.

அதன்படி வரும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நீர்வீழ்ச்சியின் மேற்பகுதியில் உள்ள சுற்றுலா படகு துறையிலும் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கின்றனர்.

Tags:    

Similar News