குமரியில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை - மக்கள் மகிழ்ச்சி.

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-06-14 02:15 GMT

ஒடிசா மேற்கு வங்க கடல்பகுதியை ஒட்டி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இரவு முதல் விடிய விடிய பரவலான தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் நாகர்கோவில், சுசீந்திரம், தக்கலை, மார்த்தாண்டம், அருமனை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் பெய்த பரவலான மழையால் வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது. மேலும் மலையோர பகுதிகளிலும் மலை நீடிப்பதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News