தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட காவலர் விலசனுக்கு குமரி காவல்துறையினர் மரியாதை

குமரியில் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட காவலர் விலசனுக்கு காவல் துறையினர் மரியாதை செலுத்தினர்.;

Update: 2022-01-09 15:15 GMT
குமரியில்  தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட போலீஸ்க்கு எஸ்பி பத்ரிநாராயணன் மரியாதை செய்தார்.

கடந்த 2020-ம் வருடம் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மார்க்கெட் ரோடு சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

அவரது 2-வது நினைவு தினமான இன்று அவர் கடைசியாக பணிபுரிந்த களியக்காவிளை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News