திற்பரப்பு அருவியில் தடையை மீறி குளித்த முக்கிய பிரமுகர்கள்: பொதுமக்கள் எதிர்ப்பு

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை இருக்கும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் குளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-08-05 13:00 GMT

திற்பரப்பு அருவியில் தடையை மீறி குளித்த முக்கிய பிரமுகர்கள்

குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வருடத்தின் அனைத்து நாட்களும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும், இந்த அழகை காணவும் அருவியில் குடும்பத்தினருடன் குளித்து மகிழவும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குவிவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக திற்பரப்பு அருவிக்கு செல்லவும் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில் அருவிக்கு செல்லும் வழியை அடைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது பேரூராட்சி நிர்வாகம்.

இந்நிலையில் பல மாதங்களாக பூட்டப்பட்டு கிடைக்கும் திற்பரப்பு அருவியில் இன்று அதிகாலையில் சில முக்கிய பிரமுகர்கள் குளிக்கும் காட்சி வெளியானது, பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் முக்கிய பிரமுகர்கள் பூட்டப்பட்டு இருந்த கதவை திறந்து குளித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதித்த பேரூராட்சி நிர்வாகம் எப்படி தடையை மீறி அருவியில் குளிக்க அனுமதித்தது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

Tags:    

Similar News