தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சைக்கிளில் புகுந்த சிறுவன் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்
கேரளாவில் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் புகுந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்;
கேரளா மாநிலம் கண்ணுார் தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேர போக்குவரத்து நெரிசல் காணப்படும் பகுதியில் உள்ள குடியிருப்பில் சிறுவர்கள் சைக்கிள் ஒட்டிய படி விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அறியா பருவம் கொண்ட சிறுவன் தனது சைக்கிளில் வேகமாக வந்ததோடு பிரதான சாலையில் குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தில் மோதி மறுபுறம் விழுந்தார். அப்போது நெடுஞ்சாலையில் வந்த பேருந்து சைக்கிள் மீது ஏறி இறங்கி நின்றது, இந்த சம்பவத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவன் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் இது தொடர்பான பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.