குமரி - பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்
முழு ஊரடங்கில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாரை நேரில் சந்தித்து அமைச்சர் நன்றி தெரிவித்த அமைச்சர் .;
கொரோனா பரவலை தடுக்கவும் பரவலை கட்டுப்படுத்தவும் தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பரவலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக தமிழக அரசு பிறப்பித்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி மாவட்டம் முழுவதும் 83 இடங்களில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நோய்த்தொற்று பரவல் காலத்தில் தன்னலம் மறந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரடியாக சந்தித்து பாராட்டினார்.
மேலும் அவர்களுடன் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார், அப்போது அசாதாரண சூழ்நிலையிலும் தங்கள் கடமையை சிறப்புடன் மேற்கொள்ளும் போலீசாருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாரை அமைச்சர் ஒருவர் நேரடியாக தேடி சென்று பார்த்து அவர்களிடம் உரையாடி வருவது போலீசாரின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.