கொரோனாவால் 3095 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில்...;

Update: 2021-05-13 03:00 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 710 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது, மாவட்டத்தில் மொத்தம் 5,80,396 ( ஐந்து லட்சத்து என்பதாயிறத்து முந்நூற்று தொண்ணூற்று ஆறு ) நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தற்போது கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3095 ஆக உள்ளது.

இவர்களில் 580 நபர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் 1471 நபர்கள் கோவிட் கேர் சென்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் 1044 நபர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28413 (இருபத்தி எட்டாயிறத்து நானூற்று பதிமூன்று ) ஆக உள்ள நிலையில் இவர்களில் 22814 ( இருபத்தி இரண்டாயிரத்து எண்ணூற்று பதினான்கு ) நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை முதற்கட்ட கொரோனா  தடுப்பூசி மருந்து 92646 ( தொண்ணூற்று இரண்டாயிரத்து அருநூற்று நாற்பத்தி ஆறு ) நபர்களுக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்து 37704 ( முப்பத்தி ஏழாயிரத்து எழுநூற்று நான்கு ) நபர்களுக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.

முக கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட காரணங்களுக்காக இதுவரை 51283 ( ஐம்பத்தி ஒன்றாயிறத்து இருநூற்று என்பத்தி மூன்று ) நபர்களிடம் இருந்து ரூபாய் 1,02,92,096 ( ஒரு கோடியே இரண்டு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து தொண்ணூற்று ஆறு ) அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து நோயற்ற நிலையை உருவாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags:    

Similar News