நாகர்கோவிலில் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய பெண்ணிடம் நகை பறிப்பு

நாகர்கோவிலில் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

Update: 2022-03-18 07:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் மரிய செல்வி (வயது 72), இவர் நேற்று காலை வீட்டில் இருந்து தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 61/2 பவுன் தங்க நகையை பறித்து விட்டு தப்பியோடி விட்டனர்.

இது குறித்து மரியசெல்வி ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அந்த பகுதியில் இருந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது.

அதில் பல்வேறு காமிராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது, அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவன் முகமூடி அணிந்திருந்தான். மேலும் அந்த பகுதிகளில் உள்ள தெருக்களிலேயே சுற்றி வருவது போன்ற காட்சி பதிவாகி உள்ளது.

எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று மண்டைக்காடு பருத்தி விளை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி ஷோபா (வயது 33). இவர், மண்டைக்காடு கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்து விட்டு மர்மநபர் தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாவட்டத்தில் செயின் பறிப்பு சம்பவம் அதிகமாகி வரும் நிலையில் போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News