குழந்தைகளின் மழலை மொழியில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி.
கன்னியாகுமரியில் சிறு குழந்தைகளின் மழலை மொழியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காஞ்சாம்புறம் பகுதியில் திருவள்ளுவர் கலை பண்பாட்டு சமூக சேவை மையம் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தின் மூலம் குழந்தைகளுக்கு நடனக் கலை பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகள் கற்பிக்கப்பட்டு வரப்படுகிறது.
இந்நிலையில் மாணவர்கள் மத்தியில் திருவள்ளுவரின் புகழை பரப்பும் நோக்கில் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் ஏராளமான சிறுவர் சிறுமியர் ஆர்வமுடன் கலந்து கொண்டு மழலை மொழியில் திருக்குறள்களை ஒப்புவித்தனர்.சிறப்பான முறையில் கூடுதல் குறள்களை ஒப்புவித்த மாணவர்களுக்கு அவர்கள் ஒப்புவித்த குறளுக்கு ஏற்ப பணப்பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.