குமரியில் 85%பேருந்துகள் இயக்கம்: பயணிகளின் கூட்டத்தை காணவில்லை
குமரியில் 85 சதவீத பேருந்துகள் இயங்கிய நிலையில் பயணிகளின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.;
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த வேலைநிறுத்தம், இரண்டாம் நாளாக இன்று நடைபெற்றது.
இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 15 சதவிகித அளவிலேயே பேருந்துகள் இயங்கிய நிலையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தை திரும்ப பெற்றதால், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 சதவீத பேருந்துகள் இயங்கி வருகின்றன.
அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்கள் சகஜமாக பயணித்து வருகின்றனர். ஆனால் கேரளாவில் இரண்டு நாட்கள் முழுஅடைப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நாகர்கோவிலில் இருந்து வழக்கமாக 24 மணி நேரமும் திருவனந்தபுரத்திற்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே 2 நாள் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று பேருந்து சேவை தடை பட்டதால் பொதுமக்கள் மாற்று வழியை தேடிய நிலையில், இன்று பேருந்துகளில் பொதுமக்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது.