குமரி மாவட்டத்தை உருக்குலைத்த கனமழை

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

Update: 2021-05-16 11:45 GMT

கனமழையால் சேதமடைந்த வீடு

தென்கிழக்கு அரபிக்கடல் அதையொட்டி உள்ள லட்சத்தீவு, மால தீவு உள்ளிட்ட பகுதிகளில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவித்த வானிலை ஆய்வு மையம் குமரிமாவட்டத்திற்கு ரெட் அலார்ட்டும் விட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மாவட்டம் முழுவதும் கன மழை துவங்கி நீடித்து வருகிறது, இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள வீராணமங்களம் ஆறு, தாமிரபரணி ஆறு, போன்றவற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

சேதமடைந்த வாழை மரங்கள்

ஆற்றின் கரையோரம் உள்ள வயல்வெளிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது, பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாய பயிர்கள் அழுகும் நிலை உள்ளது. வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ன.

இதனிடையே மாவட்டத்தில் மலையோரப்பகுதிகளிலும் கனமழை நீடிப்பதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாரை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது,

ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

பேச்சிப்பாரை அணையின் முழு கொள்ளளவு 48 கன அடியாக உள்ள நிலையில் தற்போது 43 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்துள்ளது, இந்த இதன் காரணமாக அணையில் இடுத்து 5000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

மழையின் அளவு கூடும்போது கூடுதல் உபரிநீர் திறக்கப்படும் என்பதால் உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News