அரசு நிலத்தை அபகரித்து முள்வேலி அமைக்க முயற்சி, தடுத்து நிறுத்திய மலைவாழ் மக்கள்

குமரியில் அரசு நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த ரப்பர் எஸ்டேட் உரிமையாளரை மலைவாழ் மக்கள் தடுத்து நிறுத்தினர்.

Update: 2021-07-26 14:00 GMT

கன்னயாகுமரி அருகே அரசு நிலம் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மலையோர கிராமமான சிற்றாறு பகுதிக்கு அடுத்து ஆலஞ்சி பகுதி உள்ளது, இந்த பகுதியில் பல வருடங்களாக வீடு இல்லாத ஏழை மக்கள் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தனர்.

அந்த மக்களுக்கு அரசு மாற்று இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி குடியமர்த்தினர், இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள மரங்களை நெடுஞ்சாலை துறையினர் அரசுக்கு சொந்தமான மரங்கள் என தெரிய மரங்களில் அரசின் முத்திரைகளை பதித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் அந்த பகுதியில் ரப்பர் எஸ்டேட் நடத்தும் காந்திமதி அரசு மரங்கள் நிற்கும் பகுதியை சுற்றி முள்வேலி அமைத்து அரசு இடத்தை அபகரிப்பு செய்து வந்துள்ளார்.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முள்வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி உள்ளனர், மேலும் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் தடுப்பு வேலி அமைக்க வந்தவர்கள் வேலையை பாதியில் நிறுத்திவிட்டு திரும்பி சென்றனர், இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு நிலத்தை அபகரித்து முள்வேலி அமைக்க முயலும் ரப்பர் எஸ்டேட் முதலாளி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News