குமரியில் சூறை காற்று காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்து 14 வயது சிறுமி உயிரிழப்பு
அடிக்கடி சூறை காற்றும் பலமாக வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிவதோடு மின் கம்பிகளும் அறுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கன்னியாகுமரி அருகே குழித்துறை பகுதியில் சூறை காற்று காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்ததில் அந்த வழியாக நடந்து சென்றுகொண்டு இருந்த 14 வயது சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது, கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், அடிக்கடி சூறை காற்றும் பலமாக வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிவதோடு மின் கம்பிகளும் அறுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, குழித்துறை பகுதியில் கனமழை மற்றும் சூறை காற்று காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்ததில் அந்த வழியாக உறவினர்களுடன் நடந்து சென்றுகொண்டு இருந்த 14 வயது சிறுமி அஷிதா, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். சூறை காற்றில் மின் கம்பி அறுந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.