குமரியில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கலவா மீன்
குமரியில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கலவா மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்துச் சென்றனர்
கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த ஆன்டோ என்பவருக்கு சொந்தமான அக்சயா என்ற விசைப்படகில் மீனவர்கள் கடந்த 5 தினங்களுக்கு முன் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.அவர்கள் ஆழ்கடலில் வலை வீசி மீன்பிடித்து கொண்டிருந்த போது ஒரு ராட்சத அளவிலான மீன் ஒன்று வலையில் சிக்கி உள்ளது.
அதனை போராடி பிடித்த மீனவர்கள் இன்று தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்திற்கு மீனை கொண்டு வந்தனர்.மீனவரின் வலையில் சிக்கிய மீன் கலவா வகை மீன் என கூறப்படுகிறது சாதரணமாக இந்த மீன் 5 முதல் 10 கிலோ வரை மட்டும் தான் இருக்கும்.ஆனால் தற்போது சிக்கி இருக்கும் இந்த மீன் 200 முதல் 500 கிலோ வரை எடை இருக்கும் என கூறப்படுகிறது.இந்த மீன் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன் ஆகும்.ராட்சத வகை மீனை அந்த பகுதிக்கு மீன் வாங்க வந்த பொதுமக்கள் ஆர்வமுடனும் ஆச்சரியதுடனும் பார்த்து ரசித்து புகைப்படங்கள் எடுத்து சென்றனர்.