குமரியில் வங்கித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் தகவல்

வங்கித் தேர்வுக்கு குமரியில் இலவச பயிற்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தகவல் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-10-26 14:15 GMT

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் நாகர்கோவிலில் வங்கி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி, வங்கி பணியாளர் தேர்வு குழுமம் மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையம் போன்றன பல்வேறு காலி பணி இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியிடத்திற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் வைத்து அக்டோபர் 27-ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்துடன் 27-10-2021 அன்று காலை 10 மணிக்கு அலுவலத்திற்கு வந்து இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News