விலையோ கம்மி... வாங்கத்தான் ஆள் இல்லை: ​பூ சந்தை வியாபாரிகள் கவலை

குமரியில் பூக்களின் விலை சரிவான நிலையில் அதனை வாங்க ஆள் இல்லாததால் பூ சந்தை வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.;

Update: 2022-01-04 17:45 GMT
வெறிச்சோடி காணப்படும் பூமார்க்கெட். 

பூ மார்கெட்டிற்கு புகழ் பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை எம்.ஜி.ஆர் மலர் வணிக வளாகத்தில் பூக்களின் வரத்து பலமடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைவாகக் காணப்பட்ட நிலையில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுடன், கிறிஸ்துமஸ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு தேவை அதிகரித்து காணப்பட்டதால் பூக்களின் விலை பலமடங்கு உயர்வாக காணப்பட்டது.

தற்போது பண்டிகை காலம் முடிந்ததோடு சுப நிகழ்ச்சிகளும் இல்லாத நிலையில் பூக்களின் வரத்தும் பலமடங்கு அதிகரித்து உள்ளதால் பூக்களின் விலை பலமடங்கு குறைந்துள்ளது. அதன்படி ஒரு வாரத்திற்கு முன்பு வரை ஒரு கிலோ மல்லிகை நான்காயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 800 ரூபாய்க்கும் 3000 ரூபாய் வரை விற்கப்பட்ட பிச்சிப்பூ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பூக்களின் விலை பலமடங்கு குறைந்தாலும் வாங்குவதற்கு யாரும் வராததால் வியாபாரம் மந்தமாக தெரிவித்த வியாபாரிகள் இதே போன்று ஏனைய பூக்களின் விலையும் கடந்த வாரத்தை ஒப்பிடும்போது மிக மிக சரிந்துள்ள நிலையில் வருமான இழப்பும் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News