திற்பரப்பு அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குமரியின் குற்றாலம் திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி பொங்க குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2021-12-18 14:45 GMT

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தை அடுத்து சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்ப்பது குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகும் கோதையாறு இங்கு அருவியாக கொட்டி சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வருகிறது. விடுமுறை நாட்களில் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும், இந்நிலையில் கொரோணா தடுப்பு நடவடிக்கையாக சிற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

கொரோணா தாக்கம் படிப்படியாக குறைந்ததை அடுத்து சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் அருவிகளில் மட்டும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில் பிற சுற்றுலா தலங்களில் செல்லும் பயணிகள் திற்பரப்பு அருவியில் குளிக்க முடியாமல் அருவியின் மேல் பகுதியில் நின்று இயற்கை அழகை பார்த்து ரசித்து எமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் அங்கு சுற்றுலா பயணிகளை நம்பி வாழும் வியாபரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டன, இதனால் அருவியில் குளிக்க அனுமதி அளிக்க அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்தி குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கியது, ஆனால் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கவில்லை.

இதனால் திற்பரப்பு அருவியில் அனுமதி அளிக்க கோரிக்கை வலுவடைந்தது, இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் திற்பரப்பு அருவியை இன்று முதல் அனுமதி அளித்துள்ளார். இதனால் 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று முதல் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர், இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் இப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News