தோளில் அமர்ந்து உல்லாச பயணம், பச்சைக்கிளியின் சேட்டையை ரசிக்கும் பொதுமக்கள்
குமரியில் உரிமையாளரின் தோளில் அமர்ந்து உல்லாச பயணம் செய்யும் பச்சைக்கிளியின் சேட்டையை பொதுமக்கள் ரசித்து செல்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்த வினோதேவ் என்ற வாலிபர் சந்தையில் காய்கறிகள் வியாபாரம் செய்து வருகிறார்.
இவரின் வீட்டின் அருகில் நின்றிருந்த ஒரு தென்னை மரத்தில் இருந்து நோய்வாய்ப்பட்ட பச்சைக்கிளி கிடைத்துள்ளது,
அதனை தனது வீட்டுக்கு கொண்டு வந்து பால் பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வளர்த்து வந்துள்ளார்.
நாளடைவில் நோய் தீர்ந்து நலம் பெற்ற பச்சைக்கிளி அவருடன் பழக தொடங்கிய நிலையில் வாலிபர் எங்கு சென்றாலும் அவர் கூடவே கிளியும் தோளில் ஏறி அமர்ந்து கொண்டு சென்று விடும்.
கூட அழைத்து செல்லவில்லை என்றால் தனது கீச்சு குரலால் அழுது அடம்பிடித்து விடுமாம், இவர் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் பொருட்கள் வாங்க சென்றால் வினோதேவின் பின்னால் தோளில் அமர்ந்து கொண்டு கிளியும் உல்லாச பயணம் செல்லும்.
அதேவேளையில் வெளியே வந்துவிட்டோம் தப்பித்து சென்றுவிடாலம் என்று பறந்து செல்வதும் இல்லை, இதனிடையே பச்சை கிளி வினோவின் தோள் மீது அமர்ந்து பயணம் செய்வதையும் அதன் சேட்டைகளையும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சிரியத்துடன் கண்டும் ரசித்தும் செல்கின்றனர்.