இது பணநாயகத்திற்கான தேர்தல்: 500 ரூபாய் நோட்டு மாலையுடன் வந்தவரால் பரபரப்பு

வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வாக்களிக்க வந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர், நடைபெற்ற தேர்தல் ஜனநாயகம் இல்லை பணநாயகம் என கூறினார்.;

Update: 2022-02-19 16:00 GMT

500 ரூபாய் மாலையும் வாக்களிக்க வந்த நபர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றது. இந்நிலையில் பூதப்பாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வாக்களிக்க வந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் , நடைபெற்ற தேர்தல் ஜனநாயகம் இல்லை பணநாயகம் என கூறினார்.

மேலும் மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக கூறி 500 ரூபாய் நோட்டுகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டு வாக்களிக்க வந்ததால் போலீசாருக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News