குமரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு

குமரியில் இருசக்கர வாகனத்தில் லாறி மோதி விபத்து ஏற்படும் பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.;

Update: 2021-11-27 14:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி காவுவிளை பகுதியை சேர்ந்தவர் 52 வயதான மாதவன் ஆசாரி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் கல்லூரி படிக்கும் இருமகன்களும் உள்ளனர்.

மரவேலை செய்து வரும் இவர் இன்று காலை நட்டாலம் பகுதியில்  வேலைக்கு செல்வதற்காக தனது  இருசக்கர வாகனத்தில்  பயணம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாறி இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாதவன் ஆசாரி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் காவல்துறையினர் வழக்குபதிவு அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மாதவன் ஆசாரி ஒட்டிவந்த இருசக்கர வாகனம் பீது  மற்றொறு இருசக்கர வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாதவன் ஆசாரி  மீது லாரி மோதியது தெரியவந்தது.

இதையடுத்து லாரி ஓட்டுனரான தேமானூர் புளியம்விளையை சேர்ந்த சுரேஷ் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மற்றொரு இருசக்கர வாகனத்தை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News