குமரியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், குமரி மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

Update: 2021-05-09 12:39 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோன்கோரோணா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24912 ஆக உள்ளது. இவர்களில் 21263 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை முதற்கட்ட கொரோனா தடுப்பூசி 91003 நபர்களுக்கும், இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்து 32379 நபர்களுக்கும் செலுத்தப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட காரணங்களுக்காக இதுவரை 47666 நபர்களிடம் இருந்து ரூபாய் 9443526 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து நோயற்ற நிலையை உருவாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags:    

Similar News