கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 1471 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது, மாவட்டத்தில் மொத்தம் 5,98,546 ( ஐந்து லட்சத்து தொண்ணூற்று எட்டாயிறத்து ஐநூற்று நாற்பத்தி ஆறு ) நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தற்போது கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4686 ஆக உள்ள நிலையில், இவர்களில் 586 நபர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் 1963 நபர்கள் கோவிட் கேர் சென்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் 2137 நபர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை மாவட்டத்தில்கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 34265 ( முப்பத்தி நான்காயிரத்து இருநூற்று அறுபத்தி ஐந்து ) ஆக உள்ள நிலையில் இவர்களில் 26555 ( இருபத்தி ஆராயிரத்து ஐநூற்று ஐம்பத்தி ஐந்து ) நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை முதற்கட்ட கொரோனா தடுப்பூசி மருந்து 94877 ( தொண்ணூற்று நான்காயிரத்து எண்ணூற்று எழுபத்தி ஏழு ) நபர்களுக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்து 41142 ( நாற்பத்தி ஒன்றாயிரத்து நூற்று நாற்பத்தி இரண்டு ) நபர்களுக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.
முக கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட காரணங்களுக்காக இதுவரை 52119 ( ஐம்பத்தி இரண்டாயிரத்து நூற்று பத்தொன்பது ) நபர்களிடம் இருந்து ரூபாய் 1,07,95,596 ( ஒரு கோடியே ஏழு லட்சத்து தொண்ணூற்று ஐந்தாயிரத்து ஐநூற்று தொண்ணூற்று ஆறு ) அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
கொரோனாவை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து நோயற்ற நிலையை உருவாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.