குமரியில் பள்ளிக்கு வந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியர்

குமரியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்றார்.

Update: 2021-11-02 16:30 GMT

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் நவம்பர் 1 ஆம் தேதியான நேற்று முதல் மாநிலம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது, அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1-ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்படவில்லை, இதனிடையே இன்று மாநில அரசின் உத்தரவுப்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்கள் கூறியும் வரவேற்றார். இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பரிசு பொருட்கள் வழங்கியும் வித்தியாசமான முறையில் மாணவர்களை வரவேற்றனர்.

Tags:    

Similar News