கடல் கூண்டுகளில் வளர்க்கப்பட்ட மீன்கள் பிடிக்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

குமரியில் கடல் கூண்டுகளில் வளர்க்கப்பட்ட மீன்களை பிடிக்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-04 16:15 GMT

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறையின் சார்பில் கன்னியாகுமரி லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் கடந்த ஓராண்டு காலமாக உலக வங்கி நிதியுதவியுடன் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மேலாண் திட்டத்தின் கீழ் தலா ரூ.2 இலட்சம் மதிப்பில் 2 கூண்டுகளில் கொடுவா மீன்கள் வளர்க்கப்பட்டது. அதன்படி வளர்க்கப்பட்ட கொடுவா மீன்களை பிடிக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், தொடங்கி வைத்தார். மேலும் பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

Tags:    

Similar News