அனாதை இல்லம் பெயரில் வசூல் வேட்டை: மாேசடி பெண் கெஞ்சிய வீடியாே வைரல்

அனாதை இல்லம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்திய பெண் கையும் களவுமாக பிடித்த நபரிடம் காலில் விழுந்து கெஞ்சிய வீடியோ வைரல்.

Update: 2021-09-06 12:45 GMT

கருங்கல் பகுதிகளில் அனாதை இல்லம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்திய பெண்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் இருந்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கன்னியாகுமரி அருகே அன்னை அனாதை இல்லம் என்ற பெயரில் டிரஸ்ட் நடத்தி வருவதாக கூறி போலியாக டொனேஷன் சிலிப் அடித்து வைத்து கொண்டு ஒவ்வொரு வீடுகளாக சென்று டொனேஷன் வாங்கி ஏமாற்றி உள்ளார்.

இந்த நிலையில் ஆசிரியர் ஒருவரிடம் போய் டொனேஷன் கேட்ட போது அவர் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், உங்கள் பெயர் என்ன என்பது குறித்த கேள்விகள் கேட்டதற்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த ஆசிரியர் அந்த பெண்ணிடம் உண்மையான முகவரியை கேட்டு சொல்லாததால் கருங்கல் காவல்நிலையத்தில் பிடித்து கொடுப்பேன் என்று கூறி அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.

இதனால் அச்சம் அடைந்த அந்த பெண் நான் செய்தது தவறு உங்கள் சகோதரியை போல் நினைத்து விட்டு விடுங்கள் உங்கள் காலில் வேண்டுமென்றாலும் விழுகிறேன் என்று கெஞ்சுகிறார்.இது குறித்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பரப்பபட்டு வைரலாகி பரவி வருகிறது.

பிறரிடம் பணத்தை ஏமாற்றி பறிக்கும் இது போன்ற கும்பலால் உண்மையாக உதவியை எதிர்பார்க்கும் அனாதை இல்லங்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்காமல் போகிறது.

Tags:    

Similar News