குமரி அருகே மின் கம்பியில் உரசி தென்னை மரம் எரிந்து சேதம்
குமரியில் சூறை காற்றில் உயர் மின் அளுத்த கம்பியில் உரசி தென்னை மரம் தீ பிடித்து எரிந்தது.;
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கும்பனாளி பகுதியில் தனி தபர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் நின்றிருந்த தென்னை மரம் அதிகாலை நேரத்தில் திடீரென தீ பிடித்து எரிந்தது.
இதனை அந்த வழியாக நடந்து சென்றவர்கள் கண்டு கூச்சலிடவே நிலத்திற்கு உரிமையாளர் அங்கு வந்து பார்த்த போது தென்னை மரத்தின் அருகே செல்லும் உயர் மின் அழுத்த கம்பி உரசி தீ பிடித்ததை கண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து மின்சாரத்தை துண்டித்து உள்ளார்.
தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீ அணைந்த பிறகு உயர் மின்னழுத்த கம்பியில் உரசும்படி நின்றிருந்த தென்னை ஓலைகளை இழுத்து கீழே தள்ளி பாதுகாப்பை ஏற்படுத்தி விட்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த உடனே மின்வாரிய ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் தீ பிடிக்காமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.