பெட்ரோல், டீசல், விலை உயர்வு கண்டித்து சிஐடியுவினர் வாகனம் நிறுத்தும் போராட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து குமரியில் நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி சிஐடியு போராட்டம்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்புக்கு வந்த நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோலுக்கு கலால் வரி 9 ரூபாய் இருந்ததை இன்று 33 ரூபாயாக உயர்த்தி இருப்பதாக சி.ஐ.டி.யு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.
கலால் வரி உயர்வால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு வின் விலையானது வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்களை பாதிக்கும் விலை உயர்வுக்கு காரணமான மத்திய பாஜக அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 இடங்களில் இன்று நண்பகல் 12 மணி அளவில் 10 நிமிடம் சாலைகளில் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி சி.ஐ.டி.யு. வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.