ஜேசிபியால் ரோட்டை தோண்டி செம்மண் கடத்தல்: ஆற்றைத் தாண்டி நடுரோட்டிலும் தொடரும் மணற் கொள்ளை

சாலை சீரமைப்பு பணியின் போது செம்மண் கடத்தலில் ஈடுபட்ட லாரியை சேஸ் செய்து பிடித்த தாசில்தார்.

Update: 2021-08-12 14:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியாவிளை முளமூட்டு விளை செல்லும் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை பல வருடங்களாக போக்குவரத்துக்கு லாயக்கற்று இருந்தது. இதனை சீர்செய்ய பொதுமக்கள் அரசிடம் தொடர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அரசு கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 16 லட்சம் ருபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணி கடந்த 3 தினங்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அப்போது அந்த சாலையை சீரமைக்க வந்த ஒப்பந்ததாரர் சாலையை ஜேசிபி இயந்திரம் கொண்டு கிளைத்து 1 அடி ஆழத்திற்கு குழிதோண்டி சாலையை கிளறி உள்ளார். மேலும் அதிலிருந்து கிடைத்த செம்மண்ணை குளச்சல், திக்கணங்கோடு, திங்கள்சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 1500 முதல் 2000 ருபாய் வரை வாங்கி கொண்டு எந்த வித அனுமதியும் இல்லாமல் டெம்போக்களில் ஏற்றி விற்பனை செய்துள்ளார்.

இது சம்பந்தமாக புகார் கிள்ளியூர் தாசில்தாருக்கு கிடைத்தையடுத்து நேற்று மாலை வேளையில் பணி நடைபெறும் இடத்திற்கு வந்த தாசில்தார் ஜூலியன் தலைமையில் வருவாய் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணி நடைபெறும் இடத்தில் இருந்து செம்மண் ஏற்றி கொண்டு வெளிய செல்ல வந்த டெம்போ அதிகாரிகளை கண்டதும் வேகம் எடுத்த நிலையில் அதனை சேஸ் செய்து பிடித்த அதிகாரிகள் அதனை மத்திக்கோடு ஊராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலைப்பணி என்ற பெயரில் செம்மண் கடத்தி விற்பனை செய்து வருவது குமரி மாவட்டத்தில் தொடர் கதையாக நடந்து வரும் நிலையில் அதிகாரிகளின் நடவடிக்கை பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

Tags:    

Similar News