கன்னியாகுமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 71 கனரக வாகனங்கள் மீது வழக்கு

கன்னியாகுமரியில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் அதிக பாரத்துடன் அதி வேகமாக வந்த 71 கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.;

Update: 2021-06-29 13:00 GMT

கன்னியாகுமாரி போலீஸ் எஸ்பி பத்ரி நாராயணன் (பைல் படம்)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் பல கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி வேகமாக வருவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக தொடர் புகார்கள் இருந்து வந்தன.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கு வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

அதன்படி நடைபெற்ற வாகன சோதனையில் அதிக பாரம் ஏற்றி வேகமாக வந்த 71 கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து வாகன சோதனை நடைபெரும் என்றும், அதிக பாரம் ஏற்றி வேகமாக வரும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News