குமரியில் விமரிசையாக நடைபெற்ற பக்ரீத் பண்டிகை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக பக்ரீத் பண்டிகை இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Update: 2021-07-20 12:45 GMT

தியாகத்திருநாள் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை தமிழகத்தில் நாளை கொண்டாடப்பட உள்ளது.

அதே வேளையில் வளைகுடா நாடுகளை தொடர்ந்து கேரளாவிலும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

தக்கலை, கிள்ளியூர், திட்டுவிளை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பக்ரீத் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நாகர்கோவில் கோட்டாரில் உள்ள இமாம் அல் மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளி வாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் இஸ்லாமியத்தை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனர். அப்போது ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

Tags:    

Similar News