பொது இடங்களில் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமரியில் பள்ளி கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களிடையே கஞ்சா, குட்கா போதைப் பொருள்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலையங்கள் மூலமாக பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடமும், பொதுமக்களிடமும் போதை பொருள்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டம் உருவாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.