நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: குமரியில் அதிமுக வேட்பாளர்களிடம் நேர்காணல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து தளவாய் சுந்தரம் குமரியில் அதிமுக வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்தினார்;

Update: 2022-01-30 15:30 GMT
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: குமரியில் அதிமுக வேட்பாளர்களிடம் நேர்காணல்

கன்னியாகுமரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேர்காணல் நடத்திய முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம்

  • whatsapp icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரசாரத்திற்கான முதற்கட்ட பணியில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் வகையில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நாகர்கோவிலில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நேர்காணலின் போது நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், குழித்துறை, பத்பநாபாபுரம், கொல்லங்கோடு ஆகிய நான்கு நகராட்சிகள் மற்றும் 52 பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நேர்காணலில் மாவட்டம் முழுவதும்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்த அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.இதில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில அமைப்புச் செயலாளருமான பச்சைமால், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டு நேர்காணல் செய்தனர்.

Tags:    

Similar News