தேர்தலில் மோதல் - நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்

குமரியில், தேர்தலில் மோதல் ஏற்பட்ட நிலையில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

Update: 2022-02-21 23:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி 12 வது வார்டில் கம்யூனிஸ்டு காங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் அன்று வாக்கு சேகரிப்பது சம்மந்தமாக மோதல் ஏற்பட்டது. அப்போது குழித்துறை நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் சுரேஷ் மீது, கம்யூனிஸ்டு கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக,  குற்றவாளிகளை கைது செய்ய கேட்டும், காங்கிரஸ் கட்சியினர் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை ரத்து செய்ய கேட்டும் குழித்துறை நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து நீதிமன்றம் முன் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து,  தக்கலை சரக டிஎஸ்பி கணேசன் தலைமயிலான போலீசார் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடித்து வைத்தனர். வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடைபட்டுள்ளது.

Tags:    

Similar News