கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமாெழி ஏற்பு
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 12-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 12-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் அரவிந்த் கலந்து கொண்டு வாக்காளர் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டும், "My Stamp" என்ற புதிய அஞ்சல் வில்லையினை வெளியிட்டும் பேசினார்.
அப்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25 ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம், வாக்கு உரிமை பெற்ற மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் தேர்தலில் வாக்களித்து தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்ந்தெடுப்பதற்காகவும் வாக்காளர்களின் உரிமையை நிலைநாட்டவும் தேர்தல் வழிவகை செய்கிறது.
18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தாங்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றார்.