கன்னியாகுமரியில் இருந்து வெளியூருக்கு ஏசி பஸ்
நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் குமரியில் இருந்து வெளியூருக்கு ஏசி பஸ் செயல்பட துவங்கியது.;
கொரோனா ஊரடங்கு நெறிமுறைகளின்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டன, ஆனால் அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனிடையே கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் இன்று முதல் அரசு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களுர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் அதிவேக குளிர்சாதன வசதி கொண்ட விரைவு பேருந்துகள் இன்று பிற்பகல் முதல் இயக்கப்பட்டன.
மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கப்பட்ட இந்த பேருந்துகளில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.