குமரியை சேர்ந்த 8 மீனவர்கள் இந்தோனிசியாவில் சிறைபிடிப்பு
குமரியை சேர்ந்த 8 மீனவர்கள் இந்தோனிசியாவில் சிறைபிடிக்கப்பட்டதால் மீனவ கிராமத்தில் சோகம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 8 மீனவர்கள் அந்தமான் துறைமுகத்தில் இருந்து ஆள்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இந்தோனிசிய கடற்படையினர் குமரி மாவட்ட மீனவர்களின் படகை சுற்றி வளைத்து பிடித்து படகில் இருந்த 8 மீனவர்களையும் கைது செய்து உள்ளனர்.
மேலும் அவர்களை இந்தோனேசியா துறைமுக பகுதிக்கு கொண்டு சென்று எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக அவர்கள் 8 பேர் மீதும் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளதாக கூறப்படுகிறது. குமரி மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.