கள்ளச்சந்தையில் மது விற்ற 3 பேர் கைது

Update: 2021-04-08 10:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் போலீசார் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தெற்கு கரூம்பாட்டூர் பகுதியில் கள்ளச்சந்தையில் ஒருவர் மது விற்பனை செய்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை பிடிக்க சென்ற போது கையில் இருந்த மதுபாட்டில்களை கீழே போட்டுவிட்டு போலீசை கண்டதும் தப்பி ஓடிவிட்டார். போலீசார் மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ள சந்தையில் மது விற்றது அதே பகுதியை சேர்ந்த 55 வயதான நெல்சன் என்பதும் தெரியவந்தது.

மேலும் அகஸ்தீஸ்வரம் அருகில் உள்ள கன்னி விநாயகபுரத்தில் அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த நிலையில், போலீசார் அவரையும் கைது செய்து அவரிடமிருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அதேபோல் ஆண்டிவிளை பகுதியில் மது விற்பனை செய்துகொண்டிருந்த சித்தன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தனபாலன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News