கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு; பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்
குமரியில் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடைபெற்றதால் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் அருகே பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு உறுப்பினர் சேர்க்கை ஒரு தலைபட்சமாக நடப்பதாகவும் சில பகுதிகளை சேர்ந்த உறுப்பினர்களை சேர்க்கபடுவதில்லை எனவும் உறுப்பினர் சேர்க்கையில் முறைகேடு என்று தொடர்ந்து குற்றசாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில், அரசு அறிவித்த பதினைந்து நாட்கள் தாண்டிய பிறகும் உறுப்பினர் சேர்க்கை நடக்காததை கண்டித்து சங்க அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செயலாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின், உறுப்பினர் படிவம் பொதுமக்களுக்களிடம் பெற்றுக்கொள்ளபட்டு வரும் 10ஆம் தேதிக்குள் உறுப்பினர் அட்டை கொடுக்கபடும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.