இறந்தவர் உடலை சுமந்து கால்வாயை கடந்த சோகம்

மாற்று பாதை இல்லாததால் இறந்தவர் உடலை சுமந்து சென்று கால்வாயை கடந்த அவலம்.;

Update: 2021-04-18 17:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி- சந்தைவிளைக்கு இடையே நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய் செல்கிறது . இந்த கால்வாயின் குறுக்கே பழைய குறுகிய பாலம் ஒன்று இருந்தது. அந்த பாலம் மிகவும் சேதமடைந்து இருந்ததாலும், போக்குவரத்துக்கு வசதி இல்லாமல் மிகவும் சிறியதாக இருந்ததாலும் அதை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. சில வாரங்களுக்கு முன் பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதன் அருகே ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய அளவில் சிறிய மாற்று பாதை அமைக்கப்படடுள்ளது. அந்த மாற்று பாதை வழியாக சிறிய வாகனம் மற்றும் ஒருசிலர் சேர்ந்து செல்ல முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இறந்த ஒருவரின் உடலை தகனம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அப்போது பாலம் பணிகள் நடைபெற்று வருவதால் சரியான மாற்று பாதை இல்லாததாலும் இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து சிலர் ஒன்று சேர்ந்து உடலை கால்வாய்க்குள் இறக்கி தண்ணீர் வழியாக மறுகரையில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். மேலும் விரைவில் மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News