கடற்கரையில் 108 முட்டையிட்ட ஆமை, கடலுக்குள் செல்ல முடியாமல் தவிப்பு

குமரியில் 108 முட்டையிட்ட ஆமை, கடலுக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் மீனவர்கள் துணையுடன் கடலுக்குள் சென்றது.;

Update: 2022-02-27 15:47 GMT

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி வாவுத்துறை கடற்கரையில் கடலில் இருந்து கரைக்கு ஒரு ஆமை வந்தது. இந்த ஆமையானது கடற்கரை மணலில் 108 முட்டைகளையிட்டது. பின்னர் கடலுக்கு செல்ல முயற்சித்த போது ஆமையால் கடலுக்குள் செல்ல முடியவில்லை.

இதனை கவனித்த வாவுத்துறை மீனவ கிராம மக்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த கடலோர பாதுகாப்பு போலீசார் மீனவர்கள் உதவியுடன் ஆமையை பாதுகாப்பாக கடலுக்குள் விட்டனர்.

மேலும் ஆமையிட்ட 108 முட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்கள், முட்டைகளை ஆமை முட்டைகள் பாதுகாப்பு மையத்திற்கு எடுத்து சென்ற வனத்துறையினர் முட்டைகளில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளி வந்தவுடன் கடலில் சென்று விடப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News