வாலிபர் தற்கொலை - போலீசார் விசாரணை

Update: 2021-04-13 11:45 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின். இவரது மகன் சகாய பினிஷ் (22). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மனவருத்தத்துடன் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் தனது பெற்றோரிடம் அடிக்கடி தான் தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் சகாயபினிஷ் வீட்டு மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News