குமரியில் நாளை காவல் துறையில் உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

குமரி மாவட்ட காவல் துறையில் உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்கள், நாளை பொது ஏலம் விடப்படுகிறது.;

Update: 2022-01-05 01:15 GMT

கன்னியாகுமரி மாவட்டதில்,   காவல்துறையில் உபயோகப்படுத்தப்பட்ட 16 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 26 இருச்சக்கர வாகனங்கள் என மொத்தம் 42 வாகனங்களை பொது ஏலம் விடப்பட உள்ளது. அதன்படி, நாளை 6 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு நாகர்கோவில், மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள காவல் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது.

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள்,  ஏலம் குறித்த சந்தேகங்களுக்கு ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண்ணான 04652-261389 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News