கார் டயர் வெடித்து விபத்து - இருவர் படுகாயம்

கன்னியாகுமரியில் காரின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம். அடைந்தனர்.

Update: 2021-10-31 14:45 GMT

குமரியில் நடந்த கார் விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்துகொண்டிருந்த கார் ராஜாக்கமங்களம் அருகே வரும் போது காரின் முன்பக்க டயர் வெடித்தது.

இதில் நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் எதிரே வந்த கார் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது, இந்த விபத்தில் இரு கார்களிலும் இருந்த ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்தனர்.

இரு கார்களிலும் வேறு யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது, இச்சம்பவத்தால் நாகர்கோவில் குளச்சல் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

Tags:    

Similar News