நகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

- போலீசார் வைத்த பொறியில் சிக்கிய குற்றவாளி;

Update: 2021-04-29 06:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர் அந்த பகுதியில் ஒரு நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு இவரது நகைக்கடையில் மர்மநபர் பூட்டை உடைத்து திருட முற்படும் போது அங்கு இருந்த அபாய மணி அடிக்கவே மர்மநபர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் குற்றவாளியை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடிவந்த நிலையில் கடையை உடைத்து திருட முயன்றது மார்த்தாண்டம் துறை பகுதியை சேர்ந்த பாபு (34) என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விரைந்து குற்றவாளியை பிடித்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

Tags:    

Similar News