ஊரடங்கு தளர்வையொட்டி குமரியில் கோவில்கள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி

வார இறுதி நாட்களில் கோவில்களில் தரிசனத்திற்கு இருந்த தடை நீங்கியதால் குமரியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-01-28 12:45 GMT

நீண்ட நாட்களுக்கு பின்னர் வெள்ளி கிழமையை முன்னிட்டு குமரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கொரோனா மற்றும் ஓமிக்கிரான் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு வழிபாட்டு தளங்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்தது.

இதனிடையே தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்கிரான் பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அதன்படி வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்களில் சுவாமி தரிசனம் செய்ய இருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் வெள்ளி கிழமையை முன்னிட்டு குமரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அதன்படி தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள தானுமாலயன் சுவாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தடை விலகினாலும் கட்டுப்பாடுகள் நீடிப்பதால் அனைத்து கோவில்களிலும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

Tags:    

Similar News