குமரியில் புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு குமரி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கத்தோலிக்க திருச்சபை, மலங்கரை, சீரோ மலபார், தென்னிந்திய திருச்சபை, சால்வேஷன் ஆர்மி, பெந்தேகோஸ்தே உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட சபைகளின் கீழ் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேவாலயங்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு சிறப்பு திருப்பலி, ஆராதனை மற்றும் பிரார்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள திருஇருதய குடும்ப தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான பெண்கள் பல்வேறு குழுக்களாக வண்ண வண்ண சீருடைகள் அணிந்து பங்கேற்றனர்.
திருப்பலியில் பங்கேற்றவர்கள் 2021 ஆம் ஆண்டில் கொரோனா விவகாரத்தால் பெரும் துயரங்களையும் இடையூறுகளையும் சந்தித்த நிலையில், தற்போது பொது மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா உருமாறிய ஓமிகிரான் தொற்று பாதிப்புகள் உலகை விட்டே ஒழியவும் 2022ஆம் ஆண்டு துன்பமில்லாத மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமையவும் கூறி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மேலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.