குமரியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

குமரியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2022-05-11 09:00 GMT

எஸ்.பி., யிடம் பாராட்டு பெற்ற காவலர்கள்.  

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், அரசு குற்ற வழக்கறிஞர்கள், குழந்தைகள் நல அலுவலர், சுகாதாரத்துறை ஊழியர்கள், வட்டார போக்குவரத்து ஆய்வாளர், மின்சார துறை பொறியாளர் மற்றும் அனைத்து காவல்நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்ற மாதத்தில் சிறப்பாக பணியாற்றி பல்வேறு திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து, திருட்டு பொருள்களை மீட்ட தனிப்படையினர் மற்றும் செயின் பறிப்பு வழக்குகளில் குற்றவாளிகளை பிடித்து திருட்டு பொருள்களை மீட்ட தனிப்படையினரையும், தங்களது புலன்விசாரணயில் இருக்கும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை விரைந்து முடித்த காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு உதவிப்புரிந்த CCTNS ஆப்ரேட்டர்கள், கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்களை விற்ற குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினர் மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags:    

Similar News