கப்பல் மோதி விசைப்படகு சேதம்: நடவடிக்கை எடுக்க மீனவ அமைப்பினர் மனு

வெளிநாட்டு கப்பல் மோதி விசைப்படகு சேதம் ஆன சம்பவத்தில் சர்வதேச கடல் எல்கை சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

Update: 2021-10-27 14:30 GMT

வெளிநாட்டு கப்பல் மாேதியதில் சேதமான விசைப்படகு.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியிலிருந்து கடந்த 23ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற விசைப்படகு மீது கடல் எல்லையில் 19 நாட்டிங்கள் கடல் தூரத்தில் பனாமா நாட்டு சரக்கு கப்பல் மோதியது.

இந்த விபத்தில் விசைப்படகில் பயணம் செய்த 2 மீனவர்கள் படு காயமும், 15 மீனவர்கள் படுகாயமும் அடைந்து கேரளாவிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் சர்வதேச கடல் எல்கை 44 நாட்டிங்கள் என்று இருக்கும் நிலையில் 19 நாட்டிங்கள் தொலைவில் விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்தில் எல்கையை மீறி கப்பல் வந்தது உறுதியாகி உள்ளது.

எனவே சர்வதேச கடல் எல்கை சட்டபடி மோதிய கப்பல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் குளச்சல் அருட்பணியாளர் தலைமையில் மீனவ அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News