குமரியில் வேனில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குமரியில் இருந்து வேனில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
குமரி மாவட்டத்தில் இருந்து செம்மான்விளை வழியாக ஓமனி வேனில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக நித்திரவிளை தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மங்காடு பகுதியில் நின்ற தனிப்படையினர் பாலம் வழியாக சந்தேகப்படும்படியாக வந்த ஓமனி வேனை தடுத்தி நிறுத்த முயன்றுள்ளார்.
இதனை கண்ட டிரைவர் வேனை நிறுத்தாமல் அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளார், உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அந்த வேனை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று செம்மான்விளை பகுதியில் வைத்து மடக்கினர்.
வேனை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் போலீசார் ஓமனி வேனின் உள்ளே திறந்து பார்த்தபோது சுமார் 50 கிலோ எடையுள்ள 21 சாக்கு மூடைகளில் சுமார் 1050 கிலோ ரேசன் அரிசி இருந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை வாகனத்துடன் பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.