கடல் சீற்றத்தால் 48 மீனவ கிராமங்கள் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் 48 மீனவ கிராமங்கள் பாதிப்படைந்தது.
தென்மேற்கு அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப் பெற்றுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் சின்னமுட்டம் முதல் நீரோடி காலனி வரையிலான 48 மீனவர் கிராமங்கள் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மீனவ கிராமங்களில் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் வீடுகள் சேதமாகின, இதனை தொடர்ந்து அழிக்கால், மொழிக்கரை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.